ஆம்பூர் சிக்கன் பிரியாணி | Ambur Chicken Biryani In Tamil | Ambur Biryani | Biryani Recipes

ஆம்பூர் சிக்கன் பிரியாணி | Ambur Chicken Biryani In Tamil | Ambur Biryani | Biryani Recipes

ஆம்பூர் சிக்கன் பிரியாணி | Ambur Chicken Biryani In Tamil | Ambur Biryan | Biryani Recipes | Chicken Recipes | Lunch Recipes | Dum Biryani | Ambur Special Recipes |


#amburchickenbiryani #ஆம்பூர்சிக்கன்பிரியாணி #biryanirecipes #amburspecialrecipes #lunchrecipes #chickenrecipes #amburbiryani #dumbiryani #chickendumbiryani #biryani #amburbiryaniintamil #howtomakeamburchickenbiryani #howtomakechickenbiryani #chicken #chickenbiryanirecipes #chickenbiryani #amburchickendumbiryani #ambur #hemasubramanian #homecookingtamil

ஆம்பூர் சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள்


சிக்கன் - 1 கிலோ

சீரக சம்பா அரிசி - 1 கப் (500 மில்லி கப்)

தண்ணீர்

நெய் - 7 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

பட்டை, கிராம்பு, ஏலக்காய்

வெங்காயம் - 3 மெல்லியதாக நறுக்கியது

இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி

பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2 கீறியது

தக்காளி - 3 நறுக்கியது

கல் உப்பு - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி

சூடு தண்ணீர் - 1 கப்

எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்

தயிர் - 4 மேசைக்கரண்டி

புதினா இலை

கொத்தமல்லி இலை

பிசைந்த சப்பாத்தி மாவு


செய்முறை:

1. முதலில் அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் ஊறவிடவும்.

2. அடுத்து அகலமான பாத்திரத்தில் நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு,ஏலக்காய் சேர்க்கவும்.

3. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

4. பிறகு இஞ்சி விழுது, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

5. அடுத்து நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

6. பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து பின்பு சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

7. அடுத்து சூடு தண்ணீர், எலுமிச்சைபழச்சாறு, தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

8. பிறகு புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து பாத்திரத்தை மூடி மீதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.

9. அடுத்து மற்றோரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் சூடானதும் அதில் உப்பு சேர்த்து பின்பு ஊறவைத்த அரிசியை சேர்த்து 3/4 பாகம் வேகவிடவும்.

10. பின்பு அரிசியை வடித்து தனியாக வைக்கவும்.

11. பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து அதின் மேல் சிக்கன் வேகவைத்த பாத்திரத்தை வைக்கவும்.

12. அடுத்து வேகவைத்த அரிசியை அதில் சேர்த்து கலந்து, பிறகு நெய் மற்றும் புதினா, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

13. பின்பு பாத்திரத்தை மூடி அதை சுற்றிலும் பிசைந்த மாவால் சீல் செய்து மிதமான தீயில் 25 நிமிடம் வேகவிடவும்.

14. ஆம்பூர் சிக்கன் பிரியாணி தயார்!


Comments